பக்கங்கள்

செவ்வாய், 26 ஜனவரி, 2010

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ் மக்குகள் பேரவை பிரான்சின் வாழ்த்துச் செய்தி


"முள்ளிவாய்க்கால்" முன்னும் பின்னும் - (பாகம் 1)



1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றவே
தேசியத் தலைவர் அவர்கள் போராட்டதை தொடங்கினார் என்ற
தோற்றப்பாட்டைத் தரும் வகையில்
'வட்டுக்கோட்டைக்கு" பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் சமாதான காலத்தில் நாடாத்திய
ஊடகவியலாளர் மாநாட்டில் அவரினால் கூறப்பட்ட பதிலொன்றை முன்வைத்து
இந்த பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பல சர்வதேச ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு
காரசாரமான கேள்விகளை தொடுத்திருந்த அந்த ஊடகவியலாளர் மாநாட்டில்
தேசியத் தலைவர் அவர்கள் கூறிய பதில்களோ
அல்லது மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் கூறிய பதில்களோ
யாவுமே மிகவும் நுணுக்கமாக இராஜதந்திர முறையில் கூறப்பட்டவை.
அதன் உள்ளாந்த நுண்அரசியலை புரிந்து கொள்ளாமல்
அதனை வட்டுக்கோட்டை பிரச்சாரத்துக்கு
துணைக்கு அழைத்திருப்பது என்பது மிகவும் கண்டிக்கதக்க விடயம் மட்டுமல்லாது
தேசியத் தலைவரின் போராட்ட வரலாற்றை பிழையாக பதிவு செய்கின்ற ஒரு விடயமும்கூட.

தேசியத் தலைவரின் போராட்ட வரலாற்றை எடுத்தியம்பி நிற்கும்
"விடுதலை தீபொறி" எனும் காணொளி விபரணத்தில் தேசியத் தலைவர் அவர்களே
தனது போரட்டத்தின் தொடக்கால அகபுற சுழலை மிகத்தெளிவாக தன் வாயலையே
சொல்லி நிற்கின்றார்.

இது ஒரு வெறும் ஆவணமாக மட்டுமல்லாது
விடுதலையின் சாட்சியமாகவும் விளங்கி நிற்கிறது.



1976 வடட்டுக்கோட்டைக்கு முன்னரே
1971ல்களில் தலைவர் அவர்கள் புதிய புலிகள் இயக்கம் எனும் பெயரில்
தனது போராட்டத்தை தொடங்கிவிட்டார்
( இதன் விரிவான பதிவை "விடுதலைப் தீப்பொறி" விபரணத் தொகுப்பில்
காணலாம் )

இதேவேளை
தமிழீழ கோரிக்கை என்பது தந்தை செல்வாவுக்கு முன்னரேயே
மண்ணில் ஒலித்த ஒரு விடயம்.
1905 முதலே யாழ் வாலிபர் சங்கத்தால் ஒலிக்கத் தொடங்கிவி;ட்டது என்பது வரலாறு.
இந்தக்குரல் ஆங்காங்கே பரவலாக ஒலிக்கப்பட்டதும்
அது முடக்கப்பட்டதும் ஒரு தொடர்பதிவு.

தமிழரசு கட்சி..
தமிழர் காங்கிரஸ்..என பலரும் வந்தனர்.
சமஸ்டி..மாநிலாட்சி..அது இதுவென்று கோரிக்கைகள் முன்வைக்கபட்டன.
அவையாவுமே சிங்களத்தின் இராஜதந்திரத்தால் மறுக்கப்பட்டன.

இதன் ஒரு கட்டத்தில் தோற்றம் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி
1977 தேர்தலை கருத்தில் கொண்டு 1976ம் ஆண்டு
தமிழீழ கோரிக்கையை முன்வைத்து
வட்டுக்கோட்டையில் தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலையின் பாதையில் இது ஒரு கட்டமே.

அவ்வளவுதான்.

மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள்
இக்காலப்பகுதியில் தோற்றம் பெற்ற பல இயங்கங்களின்
தமிழீழ இலட்சியத்துக்கு ஒரு வலுச்சேர்கின்ற விடயமாகவும் இருந்தது.

அண்ணளவாக 36 இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தன.
இதில் விடுதலைப் புலிகள் இயக்கமும் அடங்கும்.

இத்தருணம் இலங்கையில் 3ல்2 ஆசனங்களுடன் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி !
இந்தியாவிலோ அன்னை இந்திராவின் கொங்கிரஸ் ஆ;ட்சி !

ஐக்கிய தேசியக்கட்சியின் மேற்குலக சார்பு நிலை போக்கு
மௌனியாய் இருந்த இந்தியாவின் மௌனத்தை கலைக்கின்றன.

சிங்களத்துக்கு தலையிடி கொடுக்கவும்... பிடியை இறுக்கவும்
இந்தியாவுக்கு கிடைத்த ஒரு கயிறு
இயக்கங்களுக்கான ஆயுதப்பயிற்சியும் - அரவணைப்பும்.



தடியைத் தருகிறேன்..
பயிற்சியையும் தருகிறேன்
நாய் போல் நான் சொல்கிற படி நட ஒடு கடி என
இயக்கங்களை தனது அடிமைகளாக ஏவல்களாக
இந்தியா நடத்த நினைத்தது.

இதனை மறுத்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.

இந்தியாவின் சதி வலையை உணர்ந்து அதனை தகர்த்தெறிந்து
30 ஆண்டுகள் தனது போரடத்தை தொடர்ந்தவர்
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.

ஆனால் - இன்று
தலைவர் உயிருடன் உள்ளர் என்ற கோசத்துடன்
வட்டுக்கோட்டைக்கு வாக்களியுங்கள் என கோசமிட்டு நிற்கும்
நிற்கின்றவர்கள் தங்களையும் அறியாமலேயே
சிக்கி நிற்கும் இடம்
இந்தியாவின் சதிவலைப்பின்னல்.

அது எப்படி....?

காந்தி - சுபாஸ் சந்திரபோஸ்
செல்வா - பிரபாகரன்

கணக்கைப் போட்டுப்பாருங்கள்...
இந்தியாவின் கணக்கு புரியும் !

அதுவரை ஒரு இடைவேளை...