புதன், 3 பிப்ரவரி, 2010
அன்பார்ந்த ரீசீசீ செயற்பாட்டாளர்களே.....
- அது ஒரு சோசல் மெடத்தின் அலுவலகம்
பிரான்சில் புகலிடம் கோரிய பல்லின மக்களும்
அந்த அலுவலகத்தில் காத்திருக்கின்றனர்.
தமிழர் ஒருவர் தனக்கான உதவியை கேட்டு நிற்கின்றார்.
அலுவலக பணியாளர் அந்த தமிழரிடம் கொடுத்த முகவரி
"தமிழர் ஒருங்கிணைப்புக் குழு"
- சீட்டால் வந்த குடும்ப பிரச்சனை.
தீர்த்து வைக்க யாருமில்லை.
நீதி சொல்ல இருக்கின்ற சமூக மையம் எது ?
வாருங்கள் "ரீசீசீக்கு போவம்"
- 4 ஆண்டுகளாய் பல நாடுகள் கடந்து
பிரான்சுக்கு வந்து சேர்ந்தவனுக்கு
இராவணுவ கெடுபிடிகளினால் இடம்பெயர்ந்த தனது குடும்பம்
எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை !
ஊரில இருக்கிற தன்ர உறவுகளுடன்
தொடர்பை ஏற்படுத்த சென்ற இடம்
" தமிழர் ஒருங்கிணைப்புக் குழு"
இவ்வாறு பிரான்ஸ் தமிழர்களின் வாழ்வியலோடு
பிண்ணிப் பிணைந்த வரலாறு
ரீசீசீ என சுருக்கமாக அழைக்கப்படும்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு உண்டு.
மண்ணின் விடுதலைக்காக
புகலிட நாடுகளில் ஊன்றப்பட்ட
வெறும் அமைப்பல்ல அது.
விடுதலைக்கான நீரை மட்டும் இங்கிருந்து அது இறைக்கவில்லை.
புலத்து தமிழர்களின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களோடு
புகலிட வாழ்வியலையும் பதிவு செய்த ஒரு மையம்.
தலைவனை நெஞ்சினி;ல் ஏந்திக் கொண்டு மண்ணையும்..
மக்களையும்..மாவீரர்களையும் நேசித்து
விடுதலையே மூச்சாக கொண்டு
இங்கு செயற்பாட்டாளர்களாக பணியாற்றியவர்கள்
போற்றுதலுக்கு உரியவர்கள்
குடும்பச் சுமை
பொருளாதாரச் சுமை
அந்நிய தேசம்
மொழிப் பிரச்சனை
என பல்வேறுபட்ட நெருக்கடிகள் புறத்தில் சூழந்து கொண்டாலும்
அகத்தில் விடுதலையே நெருப்பாய் இருந்தது.
அது இவர்களை ரீசீசீயில் ஒருமித்து உழைக்க வைத்தது.
இவ்வாறு கால்நூற்றாண்டைக் கடந்த
ஒரு சமூக அசைவியக்க மையம்
இன்று பல நெருக்கடிகளுக்கு அகப்பட்டு
தனது கதவை பூட்ட வேண்டிய நிலைக்கு
வந்துள்ளது என்பது மிகவும் ஒரு சோகமான விடயம்.
2007ம் ஆண்டு ஏப்பரல் 1நாள்
17 சமூகப்பணியாளர்கள் பிரென்சு காவல்துறையால்
கைது செய்யப்பட்டதும் - பின்னர் அவர்களுக்கான நீதிமன்ற தீர்ப்புக்கமைய
ரீரீசீ அலுவலகமும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தள்ளிவைக்க தமிழர் தரப்பு முயற்சி செய்தாலும்
அது சாத்தியமற்ற நிலையே காணப்படுகின்றது.
இந்நிலையில் ரீசீசீ பூட்டப்பட வேண்டும் என்று
பிரென்சு காவல் துறையைவிட அதிகம் விரும்பவது
ரீசீசீயால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவாக்கபட்ட
மக்கள் பேரவைதான் என்பது தற்போது அம்பலமாகிவருகின்றது.
இக்குற்றச்சாட்டு "மக்கள் பேரவையை" முடக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
ரீசீசீயையும் அதனையே மூச்சாக கொண்டு செயற்படும்
பணியாளர்களின் நலன் கருதியுமே
இதனை இங்கு நாங்கள் வெளிப்படுத்த விரும்புகிறோம்.
முன்னர் நீதிமன்ற தீர்பினால்
ரீசீசீ அலுவலகம் பூட்ட வேண்டி வந்தால்
அதற்கு மாற்றீடாக சில மாதங்களுக்கு
உருவாக்கப்பட்டதுதான் மக்கள் பேரவை.
நோக்கம் சரியானது...!
ஆனால்
இன்று மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் என்று
சொல்பவர்கள்யார் ?
அவர்களின் பிண்ணனி என்ன ?
சற்று சிந்தித்து பார்க்க வேண்டிய விடயம் !
- போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதன் காரணமாக
பிரென்சு சிறையில் இருந்து
பின்னர் ஏற்படுத்திய உடன்பாட்டுக்கமைய
பிரென்சு குடியுரிமையை பெற்றுக் கொண்டு
அதற்கு பதிலீடாக ரீசீசீக்குள் நுழைந்து அதன் செயற்பாடுகளை
ரகசியமாக கொடுத்து வருகின்றவர்....
- "பாலியல் சேட்டை" முறைப்பாடுகள் காரணமாக
பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டு
பின்னர் இங்கு வந்து தொடர்ந்தும்
பெண்களுடன் பாலியல் சேட்டைகளை புரிந்து வருபவர் மட்டுமல்லாது
ரீசீசீ பணியாளர் வீடு வீடாக படியேறி சேர்த்த பங்களிப்புக்களில்
1 லட்சம் யூரோ வரை "77ம்" டிப்பாட்மென்டில் இருக்கின்ற குடும்பம் ஒன்றிடம்
பத்திரமாக வட்டிக்கு விட்டுத் தரச் சொல்லிவிட்டு
தற்போது அந்தக் குடும்பம் லண்டனுக்கு போக போற நிலையில்
பணத்தை மீட்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்.
(பாவம் ரீசீசீ பெடியள் அவங்கள் கிடைக்கிற லீவில
வீடுவீடாய் சேர்த்த காசு இப்படி கையப்படுத்தப்படுவது பெரும் வேதனை)
- புலிகளோடு பழகினால் தனது "நசுனல்ரிக்கு" பிரச்சனை என்று
ஒதுங்கி இருந்து
சொந்த வீடு வாசல் எல்லால் வேண்டி விட்டு
இப்போது தான் ஒரு முழுப்புலி எண்டு
சொல்லிக் கொண்டிக்கிற நபர்.
இவ்வாறு நீண்டு செல்லும் தில்லுமுல்லுகளை
ரகசியமாக செய்தும் செய்து கொண்டும் இருப்பவர்கள்
இன்று மக்களை மட்டுமல்ல
ரீசீசீ பணியார்களை
அதன் கட்டமைப்பை
தங்கள் பின்னால் அணிதிரளுங்கள் என்று
அழைக்கிறார்களாம் !
தேசியதின் பெயரால் இணைக்கப்பட்ட வளங்கள்
( மகளிர் அமைப்பு - கலை பண்பாட்டுக்கழகம் -
விளையாட்டுத் துறை - இளையோர் அமைப்பு...)
இவற்றை எல்லாம் தங்களின் சுய தேவைகளுக்காகவும்
சுகபோக வாழ்வுக்காகவும்
இவர்கள் பாவிக்க முனைகின்றனர்.
இவர்களை அமைப்புக்குள் அழைத்து
வந்த டென்டார்க் விடுதலைக்கு (குட்டி) இது பற்றியோ
அல்லது இதன் தாக்கம் பற்றியோ எந்தவித அக்கறையும் இன்றி
பிரான்ஸ் அமைப்பை இவ்வாறு சிதைவுற செய்து விட்டு
அவர் போய்விட்டார்.
அது போல் இப்போது விடுதலையால் நியமிக்கப்பட்ட சச்சிக்கு
இதுபற்றி முழுமையாக அறிந்து கொள்கின்ற பக்குவமோ
அல்லது ஆளுமையோ இல்லை என்பது கண்கூடு.
பகுதி நேரமாக இங்கு பொறுப்பாளர் பதவியில் உட்காட்ந்து விட்டு
(வெள்ளி வந்து திங்கள் போய்)
செல்கின்ற சசிககுக இது பற்றிய அறியவோ
அல்லது தெரியவோ வாய்பில்லை.
சச்சி மட்டும் பாவமல்ல ரீசீசீக்கு பின்னால்
தாயக விசுவாசத்துடன் இணைந்து பணியாற்றுகின்ற
பணியாற்றின செயற்பாட்டாளர்களும் பாவம்தான்.
அன்பாந்த பணியாளர்களே !
எதிர்வரும் காலங்களில் கூட்டப்படுகின்ற சந்திப்புக்களிலோ
அல்லது கூட்டங்களிலோ
மேற்குறிப்பிட்ட தகவல்களை
கேள்விகளா எழுப்புங்கள்..
உங்களுக்கு அந்த உரிமை உண்டு.
அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் உண்டு.
நீங்கள் கேள்வி எழுப்பாத பட்சத்தில்
நீங்களும் அவர்களது சுத்துமாத்துக்களுக்கு மட்டுமல்ல
இனத்தின் விடுதலையை குழிதோண்டி புதைக்கிற செயற்பாடுகளுக்கும்
உடந்தையானவர்கள் ஆகிவிடுவீர்கள் !
பெயர் குறிப்பிடதா இந்த குற்றச்சாட்டை முன்வைத்து
கேள்வி எழுப்ப வேண்டாம்
என்று உங்களை தடுக்கலாம்.
அதற்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள்.
குழப்பத்தை ஏற்படுத்தி செய்பாடுகளை சிதைப்பதல்ல எங்கள் நோக்கம்.
உங்கள் உழைப்பை இவர்கள் கையகப்படுத்தவும் சிதைக்கவும் இனி
அனுமதிக்க முடியாது.
நீங்கள்தான் தொடர்ந்தும் செயற்பட போகின்றவர்கள்...
நீண்ட பல மாதங்களாக இவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட
அவதானிப்புக்கள் புலனாய்வுகள் மூலமாகவே
இது கண்டறியப்பட்ட விடயங்களே
நாங்கள் முன்வைக்கின்றோம்.
இதற்கான ஆதாரங்களை அம்பலமாக்க வேண்டிய சூழல் வந்தால்
ஒலி-ஒளியாக
அவற்றை இங்கு முன்வைப்போம்.
அதற்கு முன்னர் நீங்கள்
கேள்விகளை எழுப்புங்கள்.
நாடுகடந்த அரசு ஒரு பம்மாத்து...
கேபி துரோகி..
ரீசீசீ பழைய ஆட்கள் கதிரைக்கு ஆசைப்படுகினம்
என்று பொய்யான கதைகளை உங்களுக்கு தொடர்சியாக சொல்லி
தங்களின் பொய்களையம் சமூகச் சீர்கேடுகளையும் மூடிமறைக்க
இவர்கள் முனைவது மட்டுமல்லாது
தங்களது இருப்பை தக்க வைக்கவும்
இவர்கள் முனைகின்றனர்.
இந்த தேச விரோத செய்பாடுகளை அனுமிக்க போகிறோமா ?
அதற்கு இனியும் இடம் கொடுக்காது கேள்வி எழுப்புங்கள்.
நீங்கள் எழுப்புகின்ற கேள்விகளின்
புற தாக்கங்களை உள்ளிருந்து
அவதானித்து விட்டு
யார் அந்த நபர்கள் ?
அவர்களின் நோக்கம் என்ன ?
அதன் ஆதாரங்கள் என்ன .?
என்பனவற்றை வெளிப்படையாக அம்பலப்படுத்துவோம்.
சந்திப்போம்..
உங்களில் ஒருவன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)