பக்கங்கள்

வியாழன், 3 ஜூன், 2010

நகைச்சுவை விருது 2010

இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை செய்தி விருதினை சங்கதி
இணையத்தளம் பெற்றுள்ளது.

விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட செய்தி இதுதான் :
தேசிய ஊடகங்கள் மீதான கொலை அச்சுறுத்தல்கள் - எல்லைகள் கடந்த ஊடகவியலாளர் அமைப்பில் முறைப்பாடு
திகதி: 04.06.2010 // தமிழீழம்

தமிழ் தேசிய ஊடகங்கள் மற்றும் அதன் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள், கொலை மிரட்டல்கள், படுகொலையை தூண்டுதல், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் யாழ் இணையம் மற்றும் மறுஆய்வு இணைய வலைப்பூ போன்ற தளங்கள் இறங்கியுள்ளமை தொடர்பில் பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பில் முறைப்பாடு ஒன்று கடந்த 3ம் திகதி வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யாழ் இணையம் மற்றும் மறுஆய்வு இணைய வலைப்பூ தளங்கள் அண்மைக்காலமாக தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மிக மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருவது தொடர்பில் தேசிய ஊடகங்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் நாட்டு காவல்துறையின் குற்றவியல் பிரிவில் ஊடக இல்ல நிர்வாகத்தினர் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதுடன், பிரான்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பிலும் இதுதொடர்பான முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவிலயாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, அவதூறு பரப்பியமை, பயங்கரவாதத்தை தூண்டியமை தொடர்பில் இந்த இணையங்களின் நிர்வாகம் மீது முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று பிரான்ஸ் இல் உள்ள எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் அலுவலகத்திற்கு சென்றிருந்த தமிழ் தேசிய ஊடகவியலாளர்கள் அங்கு தமது முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன், பிரான்ஸ் நாட்டு காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரதி ஒன்றினையும் அவர்களிடம் கையளித்துள்ளனர்.

தமிழ் ஊடகவியலாளர்கள் சந்தித்துள்ள இந்த பேரவலம் குறித்த தகவல்களை விபரமாக கேட்டறிந்த எல்லைகள் அற்ற ஊடகவிலாளர்கள் அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் திரு வின்சன் புரொசெல் (Mr. Vincent Brossel) இது குறித்து தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் அமைப்புக்களுக்கும் இது குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.