பக்கங்கள்

திங்கள், 8 பிப்ரவரி, 2010

கஸ்றோ குழுவின் தொடரும் பொய் (வி)பிரச்சாரம் !
லண்டனை தலைமை மையமாக கொண்டு இயங்கும்
GTV தொலைக்காட்சி மீது தொடர்ச்சியாக
கஸ்றோ கும்பல் தாக்கி வருகின்றமை
அனைவரும் அறிந்த உண்மை.

தற்போது கஸ்றோ வழிவந்த முட்டாள்களின்
இணைய பொய்பிரச்சார மடலான
'கறுப்பு"
எனும் பதிவில்
GTV குறித்து மீண்டும்
ஒரு பொய் பிரச்சாரத்தை முடக்கிவிட்டுள்ளனர்.

லண்டனில் இடம்பெற்ற கருத்துக் கணிப்பு தொடர்பில்
பிழையான செய்தியை வழங்கி விட்டதாக
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் கஸ்றோவின் வழிவந்த அறிவுக்கொளுந்துகளால்
நடாத்தப்படுகின்ற ஊடகங்களில்
99வீத தமிழ் மக்கள்
தமிழீழத்துக்கு வாக்களித்துள்ளனர் என்றே
செய்திகளை வெளியிட்டனர்.

உண்மையில் வாக்களித்தவர்களில்
99வீதமே ஒழிய
வாக்கெடுப்பு நடந்த
நாட்டில் வாழும்
ஒட்டுமொத்த தமிழ் மக்களில்
99வீதமானவர்கள் அல்ல.


இவ்வாறு மயக்க நிலையான செய்தியாக
99வீதம் ! 99வீதம் !
ஊடக நெறிகளுக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டு
மக்களை ஏமாற்றுவது
கஸ்றோ குழுவின் ஊடகங்களே ஒழிய
ஊடக பண்பைக் கொண்டுள்ள ஊடகங்கள் அல்ல.

பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களில்
30வீதமானவர்களே வாக்களித்தர் என்ற
உண்மையைச் சொல்வதில் என்ன தவறு ?

மீண்டும் பொய்களை சொல்லி
மக்களை மாயைத் திரைக்குள் வைத்திருக்க முனைவது
முள்ளிவாய்கiளை விட மிக மோசமான அழிவையே
தரும் என்பதை இவர்கள் உணரமாட்டார்கள்.

காரணம் இவர்களின் அறிவு அவ்வளவுதான்.

மேலும் ஏதோ மக்கள் ! மக்கள் ! என்று புலம்புகின்றனர்.
உண்மையில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.

கஸ்றோ கும்பலின் பொய்களை மக்கள் நம்பத்தயாரில்லை.
இதற்கு சாட்சியாக
சிறிலங்காவின் சுதந்திர நாளை
கரிநாளாக கருத்தில் கொண்டு
பெல்ஜியதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலுக்கு
வந்த மக்களின் எண்ணிக்கை
வெறும் 300க்குள்ளேயே ஆகும்.


கடந்த பல மாதங்களாக
இவர்கள் மக்களுக்கு விடும்
ஒன்றுகூடல்..பேரணி..பொதுக்கூட்டம்
போன்ற பல விடயங்களுக்கு
மக்கள் வருகை தருகின்றமை
மிகமிக குறைந்து விட்டது .காரணம் !
மக்கள் மிகத் தெளிவான ஒரு பதிலை
இவர்களுக்கு தொடர்சியாக
வழங்கி வருகின்றனர்.

இதனை புரிந்து கொள்ள வக்கில்லாத வம்புகள்
தேவையில்லாமல்
ஆக்கபூர்வமாக சிந்தித்து
மண்ணுக்கு பணியாற்றுகின்றவர்களை
துரோகிகள் என்று பொய்யுரைக்கின்றனர்.

மேலும் TTN தொலைக்காட்சியை
மூடுவதற்கு பிரதான காரணமாக இருந்தவர்களே
இந்த கஸ்றோ கும்பலின்
ஊடக அறிவாளிகள்தான்(?).

மேலும் ரீரீஎன்னுக்கு பின்னர்
ITTN...EURO TV...இப்போது T24 எண்டு
கடந்த 3வருசமா
ஒரு தொலைக்காட்சியை கொண்டுவர வக்கில்லை.
இந்தநிலையில் GTV மீது
அபாண்டமான குற்றச்சாட்டுகள் !

- தலைமையின் அனுமதியின்றி
2009ம் ஆண்டு
....போர் உச்சம்பெற்றிருந்த காலத்தில்
மக்களிடம்
லட்சக்கணக்கில் பணம்
பங்களிப்பாக பெற்றுக் கொண்டமை...


- " வன்னிக்கு கப்பல் வருகுதெண்டு"
அமெரிக்க அரசு தந்த கடிதம் என்று

பொய்கடிதம் தயாரித்து தலைமைக்கு அனுப்பியமை..

- தமிழ்நாதம்-புதினம் இணையத்தளங்களை
மிரட்டித்து மூடவைத்தமை...


- தலைவரின் வீரச்சாவை
மக்களுக்கு அறிவியுங்கள் என்று
கேபியிடம்
கூறிவிட்டு
பின்னர் கேபியை துரோகி என்று அறிவித்தமை...


இப்படி திரைக்கு பின்னால் நடந்த பல சம்பவங்களை
மக்கள் முன் கொண்டு வந்து உண்மையான துரோகிகள் யார் என்பதனை
இனங்காட்டுகின்ற காலம் நெருங்கி வருகின்றது என்பதனையே
கஸ்றோ கும்பலின் தொடர் அடவாடிகள் செய்பாடுகள் இருக்கின்றன.
"கறுப்பு" உண்மைத் துரோகிகளின் அடைக்கலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக