பக்கங்கள்

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

கரும்படை கும்பலே இருளைக் கிழித்து வெளியே!


  • இந்த ஆக்கத்தை படிக்கச் செல்லும் உறவுகளே

உங்களோடு ஒரு நிமிடம்……

  • நடுநிலைமை என்று வெளியுலகுக்குச் சொல்லிக் கொண்டு- தமிழ்த் தேசிய இனத்துக்கு நன்மை தரமுடியாத விடயங்களை உள்ளீர்த்துக் கொள்வதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அதேவேளை, சமூகத்துக்குச் சொல்ல வேண்டியதை- சொல்லாமல் விடும் தவறையும் நாம் இழைக்க மாட்டோம்.

    இன்றைய உலகில் மலிந்து போயுள்ள ஊடக யுத்தத்துக்குள்ளே சிக்கிக் கொள்வதற்கும் நாம் தயாரில்லை.

    தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பதே இன்றைய தேவை.

    தமிழ் மக்களின் வெளிக் கொணர வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும் போது- வீண் விவாதங்களில் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க முடியாது.

    ஊடகங்கள் மக்களின் பிரச்சினையை எடுத்துச் சொல்லும்- அவர்களுக்கு சரியான பாதையைச் சுட்டிக்காட்டும் கருவிகளாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதை வழியிலான நகர்வும் நடப்பும் தமிழ் மக்களின் விருப்பின்பாலானது. அந்த உரிமையை மறுக்கின்ற போக்கில் எம்மால் உடன்பட முடியாது.

    மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு- நாமும் புதிய புதிய சிந்தனைகளில்- ஆய்வுகளில் இறங்கும்போது தான் தெளிவு பிறக்கும். சரியான பாதையை இனங்காண முடியும்.

    மாற்றுச்சிந்தனை என்று புறக்கணிக்கப்படும் போது தான் கருத்துத் திணிப்பும் இயல்பாகவே உருவாக்கம் பெறுகிறது.

    அந்த வகையில் நாம் கீழே குறிப்பிடும் ஆக்கம் உங்களுக்கு விசனத்தை ஏற்படுத்தலாம்..?

ஆனால் ….

  • எல்லாம் நடந்து முடிந்து நடப்பவை நல்லவையகட்டும் என்று ஆனபின்பும்….

உள்ளிருந்து கொல்லும் வியாதிபடைத்தோரின் வன்மமும் மறைமுக சதிவலைப்பின்னல்களும் துரோகங்களும் தொடரவே செய்கின்றன.

  • இவ்வாறான இழிசெயல்களை நிறுத்தும்படி ஏன் எவரும் தட்டிக்கேட்கவில்லை?
  • துணிவில்லையா?
  • இல்லைப் பயமா?
  • இல்லை விடுதலை வியாபாரமா?
  • ஏன் எதற்கு இந்த வன்மம்?

இந்நிலையில் எவரெவரோவெல்லாம் தாயகவிடுதலையை உரிமைகொண்டாடி கொடுமை செய்யும்போது எம்மை அழித்து தேசத்தைக்காக்கத் துணிந்த நாம் மட்டும் உண்மைகளை வெளிக்கொணர காலம் தாழ்த்துவதென்வது ஒரு தவறாகவே உணருகின்றோம்…

எனவே:

வெளியிருந்து கே.பி காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தது எதிர்வினை வாதமென்றால் உள்ளிருந்தே காஸ்ரோ இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா முள்ளிவாய்காலில் முழு இயக்கத்தையும் அழிக்கத் துணிந்தார் என்று நாம் திருப்பிக்கேட்டால்?

  • [மன்னிக்கவும் இது உங்களுக்கு கோவம் வரும் என்பது எங்களுக்கு தெரியும்]

உங்கள் மனம் எப்படித்துடிக்கிறது என்பதை அடுத்தவனின்மீது குற்றம் சாட்டுவோர் புரிந்துகொண்டால் வேதனையின் வலி புரியும்…..,

  • ஆனால் நாம் அப்படிக் கேட்க மாட்டோம்.

காரணம்

  • தாயக விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்த அந்தப் புனிதனின் சத்தியத்தைக் களங்கப்படுதமாட்டோம்.

இந்தக் குற்றச்சாட்டை உங்களிடம் நேரடியாய் முன் வைப்பதற்குக்காரணம்

  • உருத்திரகுமாரன் உட்பட பலருக்கு எதிரான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கரும்படை வன்மம், அனைத்துலகத் தொடர்பகத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் அனைத்துலக தொடர்பகத்தின் வெளியீட்டு பிரிவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தான் எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது

  • இது எமக்கு வேதனை தருவதனால் தான் இதை இங்கு நேரடியாக குறிப்பிடுவதோடு. மாவீரர் புகழ்பாடும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப்பிரிவு இத்தகைய இழிவான காரியங்களில் ஈடுபடுவது வேதனையான ஒன்றே.

  • இதுபற்றி நாங்கள் உரியவர்களிடம் முறையிட்டோம் அவர்கள் அதற்கு கூறிய கற்பிதங்கள் விசித்திரமானவை.

எங்களுக்கும் பிழையான கருத்தூட்டல்கள் வருகின்றன நாங்கள் அவற்றுக்கு மதிப்பளிப்பதுமில்லை அதை மற்றவர்களுக்கு மறு வினியோகம் செய்வதுமில்லை. ஏனெனில்

இன்போ தமிழ் இணையம் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் பரப்புரைப்பிரிவின் அதிகார பூர்வத்தளம். நாங்களும் காஸ்ரோ அவர்களின் பொறுப்பின் கீழிருந்து பணிசெய்தவர்கள். எனவே நீங்கள் இவ்வாறான இழிசெயலைச் செய்து, புனிதனான அந்த மாவீரனைக் களங்கப்படுத்துவதை எம்மால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

ஆகையால்.....? ஒடுக்கப்பட்டோரே ஒடுக்குமுறையாளர்களாய் ஆகிய நிலையில்........?

நாம் முன்வைக்கும் இக் கருத்து உங்களுக்கு அபாண்டமான குற்றச்சாட்டாய் எடுத்து எம்மை தண்டிக்க முன்வருவதற்கு முன்னால் உண்மையைக் கண்ண்டறிந்து குழப்பவாதிகளையும் விடுதலையை நாசம்செய்வோரையும் இனம் கண்டு களை எடுத்துவிட்டு தலைவனின் சிந்தனையை சிரமேற்கொண்டு நெஞ்சினில் நெருப்ந்தி வாருங்கள் உண்மை இல்லாமல் நாம் பொய்யுரைத்தால் அக்கினிப்பிரவேசத்துக்கு என்றும் தயாராய் இருக்கின்றோம். எனவே உண்மைகள் என்றும் பிடிவாதமானவை என்ற சத்தியத்தை கத்தியின்றி இரத்தமின்றி கையிலுள்ள பேனாவில் கொண்டு உண்மையை உரக்கக்கூறுபவர்கள் என்ற துணிவோடு உரிமையோடு...

எங்கள் கருத்தை நேரடியாகவே உரியவர்களிடம் முன்வைக்கின்றோம்


இனி……
  • உங்களிடம் நேரடியாகக் கேட்கின்றோம் நாடு கடந்த தமிழீழ அரசை நாசமாக்க எழுந்து விட்ட நாசகாரக் கும்பல்களே உங்கள் உள் நோக்கம் தான் என்ன?

  • நீவீர் யாருடைய கைக் கூலி ?

தமிழினத்தின் இன்றைய பரிதாப நிலையை, அவசர அவசிய தேவைகளை முதலில் அறிந்து கொள் தெளிந்து கொள் அடுத்த நிலைக்குப் போகத் துணிந்து கொள் !

கரும்புலியாக எங்காயினும் போய் வெடித்துச் சிதறப் போகும் உணர்விருந்தால் அதைச்செய்துகொள்?

அதை உனக்கு செய்யும் துணிவை உன் தொடர்பகத் தளபதிகள் ஊட்டி வழர்க்கவில்லையா?

உண்மைக்காய் உயிர் கொடுத்த தலைவன் பாசறையில் வளர்ந்த்தாய் பறைசாற்றும் உங்கள் பிதற்றல்களுக்கு உது புரியவில்லையா?

அதுவே உன் அறிவுச் சுடரின் ஒளியாக இருக்குமெனில் அதற்கான முழுச் சுதந்திரமும் உனக்கு உண்டு , உடனே முதலில் அதனைச் செய்து காட்டி காவியமாகுங்கள்?

காவாலித்தனமாய் இருந்து கரும்படைக் கழுத்தறுப்புச் செய்து புனிதர் திருவடுயை களங்கப்படுத்தாதீர்.?

  • யாருடைதோ எடுபிடியாக அடியாளாக இயங்கும் உன்னிடம் கருத்துச் சுதந்திரமும் செயல் வீரமும் பற்றிப் பேசுவதும் அவற்றைப் புரிய வைப்பதும் நாயின் வாலை நிமிர்த்தும் செயல்தான். எனவே அதுபற்றிப் பேசுவதில் பயனில்லை.

ஏதோ தலைவரும் உருத்திரகுமாரனும் பற்றிய பல அந்தரங்க விடையங்கள் தெரிந்தவன் போல் பேசுகிறீரே?

நீவீர் என்ன தலைவரின் அந்தரங்கச் செயலாளரா?

அல்லது அவருக்கே எமனாக முளைத்துக் கடைசிவரை உடனிருந்து காட்டிக் கொடுத்த தமிழனத்தின் துரோகியா?

உன் சொல்லையும் செயலையும் கவனத்தில் கொள்ளும் எவரும் அப்படித்தான் நினைப்பர். எமக்கும் அப்படித் தெரிந்தால் வியப்பில்லையே!


சரி நீவீர் திரு. உருத்திர குமாரனைப் பற்றி சொன்னது இனியும் சொல்லப் போவதாக மிரட்டுவது அத்தனையும் அரிச்சந்திர வாக்காகவே இருக்கலாம். ஆனால் அந்த அரிச்சந்திரன் யார் என்பதை உம் அருவருப்பான கரும் உருவம் களங்கப் படுத்துகிறதே!

  • எனவே உங்கள் திருமுகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள் மக்கள் முன் வாருங்கள் நேரடி விவாதத்துக்கு. நாங்கள் சொல்கின்றோம் நாம் யாரென்று அதனால் தான் துணிவோடு விமர்சனங்களை முன்வைக்கின்றோம். கோழைத்தனமாக ஆய்வு, பின்பு மறுஆய்வு, இன்று சுவிஸ் ஆய்வு என்று வன்மம் செய்யமாட்டோம். உயிருள்ளவரை உண்மைக்காய் பாடுபடுவோம். முடிந்தால் உண்மையை உரைப்போம் வாருங்கள் மக்கள் மன்றுக்கு.

உங்களுக்கு யாழ் நகரபிதா விசுவநாதனைத் தெரிகிறது. அது முதல் யாழில் இடம் பெற்ற இப்பொழுதும் இடம் பெற்றுவரும் துன்ப துயரங்கள் பற்றி ஏதும் தெரியுமா?

அவற்றுக்கு நீவீரும் உம்போன்ற புரட்டுப் போராட்ட வீரர்களும் காட்டும் தீர்வு என்ன?

அதை செய்து காட்டுங்கள் உங்களிடம் உமையும் சத்தியமும் இருந்தால்

உங்கள் பெரிய அறிவை பாராட்டி உன் வழிக்கே மக்கள் திரு. உருத்திர குமாரனின் தலைமையை விடுத்து உன்னோடு வருவர். ஏன்?

அவர்கள் என்ன நாங்களும்தான் செல்லும் வழிதவறாயினும் செஞ்சோற்றுக்கடனுக்காய் வருவோம்…….?

  • அப்படி வருவதற்கு ஒரு சிங்களவரான வைத்திய கலாநிதி பிரையன் செனவிரத்னா வட்டுக் கோட்டைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த தமிழரை நோக்கி விடுத்த மூன்று கேள்விகளுக்கான பதிலை தந்து உங்கள் தெய்வீக முக தரிசனத்தையும் மக்களுக்கு காட்ட வேண்டும்!

வட்டுக் கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு மட்டும் ஈழத் தமிழரின் அரசியல் பயணத்தை முடிவு செய்யாது? என்பதால்?

  • நாடு கடந்த அரசின் மூலமே எமது விடுதலைப் போராட்டத்தை இன்றைய உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

அதனால்தான் எம் போன்றவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை ஆதரிக்கிறோமே அல்லாது திரு. உருத்திர குமாரன் கூறுவதற்காக அல்ல.

  • திரு. உருத்திர குமாரனின் சட்ட அறிவும் கல்வித் தகமையும் ஆளுமையும் அர்ப்பணிப்பும் இலட்சியப் பற்றும் உங்களுக்கோ உன்னை வழிநடத்தும் எந்தக் கொம்பனுக்காயினும் இருந்தால் முன்வந்து வழி நடத்துங்கள் உங்களின் பின்னால் வரத் தமிழினம் துணிந்து விடும்.

இனி டாக்டர் பிரையன் செனவிரத்னாவின் வாதத்தின் சாராம்சம் இதோ!

  1. நீங்கள் சிங்கள இனத்துடன் இப்போது உள்ள இரண்டாந்தர அடிமை நிலையில் காலவரையரை இன்றிச் சந்ததி சந்ததியாக வாழச் சம்மதமா?

  2. முட்கம்பி முகாம்களில் வதைபட்டுச் சாகும் மக்களுக்கு நீங்கள் வழங்கும் தீர்வு என்ன?

  3. அரசியல் தீர்வுக்காக காலவரையரை இன்றிக் காத்திருந்து ஒரு அமைதித் தீர்வு கிடைக்கும் என நம்புகிறீர்களா?

  4. உங்களைப் போன்றோரிடம் துப்பாக்கியும் துணிச்சலும் மறு பேச்சுப் பேசுவோரைத் சுட்டுப் போடும் வீரமும் இருக்கலாம்.?

உங்களின் வெத்து வேட்டு வீரத்தை விட விலை மதிப்பற்ற மாவீர மாணிக்கங்களையும் மனித நேயமிக்க மானுடத்தையும் அனைத்துக்கும் உயர்வான தாய் மண்ணையும் தன்மானத்தையும் தமிழினம் இழந்து நிற்கையில் வேண்டாம் இந்த ஐந்தாம் படைத் துரோகத் தனம்.?

இறுதியாக

முஸ்லீம் மக்கள் பற்றிய உங்கள் பொன்னான சிந்தனைகளை ஒரு மூலையில் தூக்கிப் போடுங்கள்.?

  • உங்களைப் போன்றே 1940களில் இந்தியக் காங்கிரஸ் தலைவர்கள் அன்றைய முஸ்லீம் மக்களினது நியாயமான சந்தேகங்களை கேட்கவோ தீர்க்கவோ முற்படாத காரணத்தால் இன்று வரை பகமையில் இரு நாடுகளும் இந்திய பாக்கிஸ்தானிய மக்கள் மட்டுமன்றி இந்து சமுத்திரப் பிராந்தியமே அழிவுச் சகதியில் சிக்கிக் கிடக்கிறது. இந்திய பிரிவினை பற்றிய அரசியல் வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுங்கள்.

    அன்று இந்தியத் தலைவர்கள் நடந்த அதே வழியில் தான் இன்று இலங்கைச் சிங்களத் தலைவர்களும் நடந்து நாட்டைக் குட்டிச் சுவராக்கி உள்ளனர். வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்களின் முழுமையான நம்பிக்கையும் ஆதரவும் இல்லாமல் தமிழீழம் ஒரு போதும் சாத்தியப்படாது.

தமிழீழத்தில் இஸ்லாமிய கிருஸ்தவ மக்கள் இந்துக்களைப் போன்ற உரிரைமகளும் பொறுப்புகளும் பெறத் தகுதியும் உரிமையும் உள்ளவர்கள் என்பதை நீங்களும் உம்போன்ற விடுதலை வீரர்களும் தெரிந்து கொள்வது அவசியம்.

நாம் இன்னமும் காட்டு மிராண்டிகள் நிலையில் இருக்க முடியாது. வீரம் மட்டும் அல்ல விவேகமும் வெற்றிக்கான படிக்கல் தான் என்பதை உணர்ந்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்ய வாருங்கள்.


"வரலாறு என்றுமே நேர் கோட்டில் பயணிப்பதில்லை" இது எமக்கான எதிர்காலம்
மே18ஆம் திகதிக்குப் பின்னர் தமிழ் தேசியப் போராட்டத்தில் உண்டாகியுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதோடு, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளும் வலுவாக அதிகரித்து வருகிறது.

அதே வேளை, இந்த தலைமைத்துவ வெற்றிடம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலையையும், விரக்தி மனோ நிலையையும் உருவாக்கி வருகிறது. இது சலிப்பான கருத்துக்களுக்கு வழியேற்படுத்துகிறது.

சலிப்பான மனோ நிலை போரட்டம் ஒன்றிற்கு தேவையான உளவுரணை தகர்ப்பதற்கு வழியேற்படுத்துகிறது.

ஆக்கபூர்வமான சிந்தனை ஓட்டத்திற்கு உரிய இடம் வழங்கப்படாமை இன்றைய தருணத்தில் தமிழ் மக்களை நோக்கிச் சூழ்ந்துள்ள இன்னொரு பின்னடைவு.

இந்தக் கேள்வி நியாயமானதும், அதிக பெறுமதியுடையதும் தான்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல; அது இன்னொரு ஆரம்பத்தின் தொடக்கம். அதனைத் தான், விடுதலைப் புலிகளின் இறுதிக் கட்டச் செயற்பாடுகளும் எடுத்தியம்புகின்றன.
சுமார் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னர், ஆயுதங்களைத் தமிழ் தேசியப் போராட்டத்தின் கவசங்கள் ஆக்கிய விடுதலைப் புலிகள், 2009 மே மாத நடுப்பகுதியில் அதனை மௌனமாக்குகின்றோம் என்று அறிவித்தனர்.

  • தமிழர் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தைக் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கான அடித் தளத்தை விடுதலைப் புலிகள் முள்ளி வாய்க்காலில் உருவாக்கி விட்டிருந்தார்கள். அதற்கு முன்னோடியாக, தமிழ் தேசியப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எதிர்கால தமிழ் சந்ததியிடம் கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில், திரு. பிரபாகரன் அவர்களே குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் உரிமைப் போரட்டத்தை விசுவாசிக்கின்ற, மாவீரர்களை மதிக்கின்ற மற்றும் இயக்கத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இன்றிருக்கின்ற வரலாற்றுப் பொறுப்பு, தமிழ்த் தேசியப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகும்.

  • எங்களுக்காக நாம் தான் போராட வேண்டும். எமது பலம் தான் எமது வாழ்வை நிர்ணயிக்கும். யாரும் எமக்கான விடுதலையை பெற்றுத் தந்துவிடுவார்கள் என்றெண்ணி மீண்டும் ஒரு தடவை நாம் ஏமாந்து விடக்கூடாது.

  • தாயகத்தில், எமக்கு சாதகமான நிலை இன்று இல்லாவிட்டாலும், என்றோ ஒரு நாள் அது எமக்கு மீணடும் கைகூடும் என்பதை மனதிற்கொள்க.

ஆனால், நாம் எடுக்கின்ற முயற்சியில் தான் அந்தக் காலக் கனிவு உண்டாகும் என்பதையும் கவனத்திற் கொள்க. ஒரு விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத பலத்தில் மட்டும் தங்கியிருக்க முடியாது.

ஒரு அடக்கப்பட்ட இனம் அதன் பலத்தை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிக்காட்ட முடியும். ஒரு கதவு மூடப்படும் போது இன்னொரு கதவு தன்னியல்பாகத் திறக்கப்படுவதே தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கான பண்பு.

ஆகவே, இன்று எமது உளவுரணை வலுப்படுத்தக் கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். போரால் நாம் ஒரு வரலாற்றுப் பேரழிவைச் சந்தித்து நிற்கிறோம் என்பது உண்மை. ஆனால், அதே வேளை, வரலாறு எமக்கு சில சந்தர்ப்பங்களையும் தந்துள்ளது. இதனை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

  • கிடைக்கும் சந்தர்ப்பங்களின் கடினமான பகுதிகளையே நம்பிக்கையற்றவன் பார்ப்பான். ஆனால், நம்பிக்கையானவனோ, கடினமான பகுதிகளில் கூட சந்தர்ப்பங்களை காணுவான் என்ற சாரப்பட்ட கருத்தை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் [Winston Churchill] தெரிவித்திருந்தார்.

எமது அடுத்த கட்டப் போராட்டத்தின் நுழைவாயிலாக பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளலாம்.

  1. தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இடையில் மறுசீரமைப்பினை மேற்கொள்ளல்.

  2. . தமிழ் தேசிய ஊடகங்களுக்கிடையில் பொது கொள்கை உருவாக்கம் ஒன்றினை ஏற்படுத்துதல்.

  3. . சிறிலங்கா அரசாங்கம் மீதான அழுத்தங்களை உருவாக்குதல் - அதிகரித்தல்

  4. . சிறிலங்கா அரசாங்கத்தின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Humanity] மற்றும் சமாதனத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Peace] போன்ற செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டு அவர்களை சர்வதேச ரீதியான குற்றவாளிக் கூண்டிற்குள் கொண்டுவந்து நீதியின் முன்னால் நிறுத்துதல்.

  5. . சிங்கள பேரினவாதிகளுக்கிடையே (சரத் - மகிந்த சகோதரர்கள்) ஏற்பட்டுள்ள பிளவை தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவான வகையில் கையாளுதல்.

  6. . ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபடும் உலக ஒழுங்கை எமக்கு சாதகமாக பயன்படுத்துதல். உதாரணமாக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பனிப் போரின் ஒரு கட்டமாக, தாய்வானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை விவகாரமும், தலாய்லாமாவிற்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்குமிடையில் வெள்மை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பையும் குறிப்பிடலாம். அதே வேளை, சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் பிணைப்பு இறுகி வருகிறது. இது, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் விரும்பத்தகாத ஒன்று.

  7. தாயகத்தில் சிதவடைந்து போயுள்ள எமது மக்களின் வழ்வாதாரத்தையும், சமூக கட்டுமானங்களையும் வலுப்படுத்தல்.

  8. புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களை வலுப்படுத்துதல்

  9. ஏனைய வெளிநாட்டு சமூக இயக்கங்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர்கள், ஒருமைப்பாட்டு இயக்கங்களோடு வலையமைப்பை உருவாக்கி ஆரோக்கியமான உறவைப் பேணுதல்.

  10. தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்துக்குச் சாதமான முறையில் அமையக் கூடிய கற்கை நெறிகள், ஆய்வு மன்றங்களை உருவாக்குதல்

மேற் போன்ற, காலத்துக்கு தேவையான, எத்தனையோ பணிகள் எம் முன்னே விரிந்து கிடக்கிறன. இன்று, தமிழர் உரிமையை வென்றெடுக்க விரும்புவோர் சிந்திக்க வேண்டியதும், செயற்பட வேண்டியதும் இவ்வாறான பணிகளே.

வரலாறு என்பது என்றுமே ஒரே கோட்டில் பயணிப்பதில்லை.



1 கருத்து:

  1. வட்டுக் கோட்டை தீர்மானம் மக்கள் பேரவை அமைத்தல் எல்லாமே பிரான்சிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான பின்னணி எங்கிருந்து வருகிறது…..

    2008 ம் டக்களஸ் அடிகளார் பிரான்சிற்கு எழுந்தருளியோது பக்ககோடிகள் பலர் அவரைச் சென்று சந்தித்து ஆசி பெற்றனர். ஆவர்களில் பொஸ்… என்ற அடியாரும் ஒருவர்.
    ஆந்த பக்தர்கள் சந்திப்பில் உரையாற்றிய டக்களஸ் சுவாமிகள் ‘ நாட்டில் விரைவில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விடுவார்கள். அதன் பின் நாமே எல்லாம் என்று கூறியதோடு வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளை கைப்பற்றுவதற்கு என்ன செய்லாம் என்று பக்த கோடிகளிடம் ஆலோசனை கேட்டார். அப்போது பக்தர் பொஸ்…தமிழீழம் என்ற கோரிக்கை விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்படவில்லை. ஜனநாயக வழியிலான தமிழ் தலைமைதான் அதை முன் வைத்தது.விடுதலைப்புலிகள் அந்தத் தலைமைகளை அழித்துவிட்டு அதை தமது பயங்கரவாத செயல்களுக்கான தளமாக விடுதலைப்புலிகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை நாங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புரிய வைக்க வேண்டும். மக்களுடைய கையொப்பங்களை பெருமளவுக்கு திரட்டி இந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தனது முதலாவது ஆலோசனையை முன் வைத்தார்.
    ஆகா அற்புதம் அதை நாங்கள் செய்வோம் என்று டக்ளஸ் சுவாமிகள் திருவாய் மொழிந்ததும் பக்தர் பொஸ்… தனது இரண்டாவது ஆலோசனையை முன் வைத்தார். அதாவது பிரான்ஸ் உட்பட்ட பல நாடுகளில் தமிழ் சங்கங்கள் பள்ளிக் கூடங்கள் தான் விடுதலைப்புலிகளின் நிர்வாக அமைப்புகளுக்கு பலம் சேர்க்கும் தளமாக இருக்கிறது.அவற்றை நாங்கள் கைப்பற்ற வேண்டும்.இதிலே இங்கோ இருக்கு தமிழ் பாடசாலைகளில் விடுதலைப்புலிகள் உருவாக்கிய பாடத்திட்டம் தான் படிப்பிக்ப்படுகிறது. ஆதற்குப் பதிலாக இலங்கையிலுள்ள தமிழ் பாடத்திட்டத்தை இங்கே படிப்பித்தால் அந்தப்பாடத்திட்டத்தின் கீழ்; பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு சிறீலங்கா அரசாங்க கல்வித்திணக்களத்தால் அங்குள்ள பரீடசைக்குரிய அங்காரம் வழக்கப்பட வேண்டும். இதைச் செய்தால் ஆநேகமான பெற்றோர்களை நாங்கள் எங்கள் பக்கம் இழுத்துவிடலாம்’ என்றார்..

    அந்த அனுமதியை என்னால் பெற்றுத் தரமுடியும் ஆனால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அவ்வளவு சுலபத்தில் வந்து விடுவார்களா? என்று டக்களஸ் சுவாமிகள் சந்தேகத்தோடு கேட்டார்?

    இது சின்ன வேலை. ஏற்கனவே இங்குள்ள சங்கங்கள் பள்ளிக் கூடங்களுக்குள் தலைமைப்பதவிக்கு சண்டை நடந்து கொண்டிருக்கிறது சங்கங்களின் கூட்டமைப்பு என்ற செயற்படாத அமைப்பு என்ற ஒன்று இருக்கிறது. அதல் உள்ள பதவிக் கதிரைகளை கைவிட விருப்பமில்லை. இப்படி நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. இவற்றை நாங்கள் பயன் படுத்தினால் இந்தச் சங்கங்களையும் பள்ளிக் கூடங்களையும் உடைத்துவிடலாம் என்று பக்தர் பொஸ் அதற்கு பதிலழித்தார்.

    அப்படியா நல்ல விசயம் நான் அதற்கு முழு ஒத்துழைப்பும் தருகிறேன்.நீங்கள் வேலைகளை செய்யுங்கள் என்று டக்ளஸ் சுவாமிகள் ஆசீர்வாதமளித்தார்

    அதன் பின்னர் பக்தர் பொஸ் தனது மூன்றாவது பரிந்துரையை முன் வைத்தாhர். ஏல்லோரும் கவனியுங்கள் இது மிக முக்கியமானது…..

    நாங்கள் பிரான்சில் இருந்து கொண்டு பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது.ஐரோபப்pய ஒன்றியத்தின் நிர்வாக மையம் பெல்ஜியத் தலைநகர் புறுக்சலில் இருக்கிறது.அங்கே நாங்கள் ஒரு அலுவலகத்தை மைத்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை இரகசியமாகச் செய்ய வேண்டும் என்றார்.

    புறுச்சலில் ஒரு அலுவலகம் அமைக்க எவ்வளவு செலவாகும் என்று டக்களஸ் சுவாமிகள் கேட்க நகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் அதற்கு எல்லாச் செலவுமாக ஒரு இலட்சம் யுரோ வரையில் ஆகும் என்றார் பக்தர் பொஸ்….

    பிரச்சனையிலலை; அதை நான் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருகிறேன். நீங்கள் விடுதலைப்புலிகளின் அமைப்புகளை உடைக்கும் வேலையை செய்யுங்கள் என்று டக்ளஸ் சுவாமிகள் திருவாய் மலர்ந்துவிட்டுச் சென்று விட்டார்.

    பக்தர் பொஸ்சினுடைய நடவடிக்கைளில் சந்தேகம் கொண்ட “உண்மை” அடியார்கள் சிலர் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்த போது அவர் கூறிய விடயங்கள் தான் இவை.

    இப்போது கணக்குப் போட்டுப் பாருங்கள் எலர்லாம் புரியும

    பதிலளிநீக்கு